எலச்சிபாளையம்:
நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருச்செங்கோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடேசன், ரங்கசாமி, செல்வராஜ், வெங்கடாஜலம், மாவட்டத் துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, சாந்தி, பொருளாளர் ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தீர்மானங்கள் குறித்துபேசினார்.
கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை தொண்டர்கள் இல்ல விழாவாக கொண்டாட வேண்டும். புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், செல்வராஜ், பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், குமாரபாளையம் நகர செயலாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.