காரிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம்

Update:2023-06-12 01:00 IST

காரிமங்கலம்

காரிமங்கலம் ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி, கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் குமரேசன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னப்பன் கூட்ட அறிக்கை மற்றும் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் வார்டு பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க மினி குடிநீா் தொட்டி வைக்க கோரி கவுன்சிலர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். இ்தில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்