அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்

மன்னார்குடி அரசு பள்ளியில் மனநல விழிப்புணர்வு முகாம்;

Update:2023-10-11 00:15 IST

மன்னார்குடி:

மன்னார்குடி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் உலக மனநல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ தொடங்கி வைத்து பேசுகையில், மனநல பாதிப்பு என்பது உடல் நல பாதிப்பை போலதான். என்றாலும் உடல் நலம் பாதிக்கும் போது ஆரம்பத்திலேயே கவனித்து குணப்படுத்தும் மக்கள், மனநலம் பாதிப்பை உணர முடியாமல் அது தீவிரமடைந்தவுடன் கவனிப்பதால்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கிறது என்றார். தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடித்து காண்பித்து, அவரை எவ்வாறு வழிநடத்துவது, குணப்படுத்துவது என்று நாடகம் மூலம் விளக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்