எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

வந்தவாசியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.;

Update:2023-01-21 18:27 IST

வந்தவாசி

வந்தவாசி தொகுதி அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் நடைபெற்றது.

ஜெயலலலிதா பேரவை மாவட்டச் செயலர் கே.பாஸ்கர் ரெட்டியார் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் டி.கே.பி.மணி, ஒன்றியச் செயலாளர்கள் டி.வி.பச்சையப்பன், எம்.கே.ஏ.லோகேஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சர்கள் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., முக்கூர் என்.சுப்பிரமணியன்,

சிறுபான்மை நலப்பிரிவு துணைச் செயலாளர் ஒய்.ஜவஹர்அலி, தலைமைக் கழக பேச்சாளர் கே.எம்.கிருஷ்ணன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் பி.ஜாகிர்உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


Tags:    

மேலும் செய்திகள்