வால்பாறை
வால்பாறையில் நபிகள் நாயகம் பிறந்த நாளை மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு வால்பாறை பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையும் மிலாது நபி ஊர்வலமும் நடைபெற்றது. வால்பாறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற மிலாது நபி தொழுகையில் வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு தொழுகைக்கு பின்னர் பள்ளி வாசல் மதரஸா அரபிக் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொட்டும் மழையில் பெரிய பள்ளிவாசலில் இருந்து மதரஸா மாணவர்களின் நடனத்துடன் வால்பாறை மெயின் ரோடு, வாழைத்தோட்டம் பகுதி வழியாக ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் மீண்டும் பள்ளிவாசலை அடைந்தவுடன் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.