விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை
விஷம் குடித்து பால் வியாபாரி தற்கொலை;
நெகமம்
நெகமத்தை அடுத்த பனப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவரது மகன் பூபதி(வயது 23). பால் வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் பூபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. அடிக்கடி மது குடித்து வந்ததால் தீராத வயிற்று வலி ஏற்பட்டது. இதற்கு அவர் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும், குணமாகாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் பூபதி நேற்று முன்தினம் இரவு மாட்டுக்கு தெளிக்கும் உண்ணி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி பூபதி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.