நெகமம்
நெகமத்தை அடுத்த குளத்துப்பாளையம் புதூரை சேர்ந்தவர் நாச்சிமுத்து(வயது 49). பால் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பனியன் கம்பெனி பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு நாச்சிமுத்து படுகாயம் அடைந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனியார் பனியன் கம்பெனி பஸ் டிரைவரான கம்மாளபட்டியை சேர்ந்த செந்தில்குமார்(55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.