சங்கரன்கோவிலில் மாரத்தான் போட்டி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்

சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாரத்தான் போட்டியை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று துவக்கி வைத்தார்.

Update: 2022-07-11 10:51 GMT

சங்கரன்கோவில்,

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா ஏற்பாட்டில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்தார் .

தென்காசி எம்.பி தனுஷ் குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெண்களுக்கு 6 கிலோமீட்டர் தூரமும் ஆண்களுக்கு 11 கிலோமீட்டர் தூரமும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

போட்டியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். தொடர்ந்து ஆண்களுக்கு நடந்த ஓட்டத்தில் கலந்துகொண்டு 11 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றனர். இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்