வளர்ச்சியை மேம்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

Update: 2022-08-24 17:31 GMT

கள்ளக்குறிச்சி

இடர்நீக்கக்குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு அளித்து தொழில் வளர்ச்சியை மேம்படுத்திட மாவட்ட அளவிலான ஒற்றை சாளர இடர்நீக்கக்குழு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது.

மேலும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான, தீயணைப்புத்துறை, தொழிற்சாலை பாதுகாப்புத்துறை, நகர்ப்புற ஊரமைப்புத்துறை, மின் இணைப்பு, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் மற்றும் பல்வேறு துறைகளின் உரிமங்கள் உள்ளிட்டவற்றை உரிய காலத்திற்குள் பெறுவதற்கு www.tnswp.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

இச்சான்றுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட தொழில்மைய பொது மேலாளர், தமிழ்நாடு மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர், மாவட்ட மாசு கட்டுப்பாட்டு பொறியாளர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன், மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் சங்கவி, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்துறை அலுவலர் சரவணன், முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்