காளப்பநாயக்கன்பட்டி அருகேமோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது

Update: 2023-05-20 19:00 GMT

சேந்தமங்கலம்:

காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள தெற்கு திருமலைகிரி கிராமத்தை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவருக்கு சொந்தமான மின்சார மோட்டார் சைக்கிளை நேற்று வீட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

எனினும் இதுதொடர்பாக நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதை தொடர்ந்து தீயணைப்பு வாகனத்தில் அங்கு சென்ற வீரர்கள் மோட்டார் சைக்கிளில் எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்