மீஞ்சூர் அருகே மொபட்- லாரி மோதல்; பிளஸ்-1 மாணவர் பலி

மீஞ்சூர் அருகே மொபட்- லாரி மோதிய விபத்தில் பிளஸ்-1 மாணவர் பலியானார்.

Update: 2022-06-09 15:14 GMT

பிளஸ்-1 மாணவர்

மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் பரசுராமன். இவர் பால் பாக்கெட்டுகளை கடைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் சாமுவேல் (வயது 17). இவர் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளியில் உள்ள தொழிற்சாலை ஒன்றுக்கு பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். காட்டுப்பள்ளி கிராமத்தில் உள்ள மேம்பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்த லாரி இவரது மொபட் மீது மோதியது.

சாவு

இதில் சாமுவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த காட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாமுவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தந்தைக்கு உதவியாக கோடை விடுமுறையில் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்து வந்த பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் அத்திப்பட்டு புதுநகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்