மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-09-07 23:43 IST

கீரமங்கலம்:

கீரமங்கலம் அருகே பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் மகன் சீனிவாசன். இவர், கீரமங்கலத்தில் தனது கடை முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை என்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தேடினார். அப்போது எழுமாங்கொல்லையில் ஒரு வீட்டில் மோட்டார் சைக்கிள் நிற்பதை அறிந்ததையடுத்து போலீசார் மூலம் அதனை மீட்டுள்ளார். சீனிவாசனின் மோட்டார் சைக்கிளை எழுமாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த கிட்டப்பா மகன் ராஜா (வயது 47) என்பவர் திருடி சென்று அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் நிறுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். மேலும் சில நாட்களுக்கு முன்பு கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் ஒரு மோட்டார் சைக்கிளை ராஜா திருடி நெய்வத்தளியில் விற்பனை செய்த இடத்திலிருந்து மோட்டார் சைக்கிள் உரிமையாளரே மீட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்