மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-12-10 01:30 IST

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆழ்வார் மற்றும் போலீசார் அரசனார்குளம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதை பார்த்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனா். அதில் அவர் களக்காடு ஜவகர்வீதியைச் சேர்ந்த நெல்சன்ராஜா (வயது 45) என்பதும், எலக்ட்ரீசியனாக வேலை பார்த்துக்கொண்டு, பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், 7 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்