மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-02-10 01:13 IST

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேல மாவடியை சேர்ந்தவர் நாராயணபெருமாள் மகன் செல்வராஜ் (வயது 37). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை, அவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணபெருமாள் எடுத்துச் சென்றார். சாலைப்புதூர் ரோட்டோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று விட்டதை அறிந்த அவர் இதுபற்றி செல்வராஜ்க்கு தகவல் கொடுத்தார். அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மோட்டார் சைக்கிளை திருடியது சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்