பொள்ளாச்சியில் கொட்டி தீர்த்த மழை-ரோட்டில் குளம்போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

பொள்ளாச்சியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.;

Update:2022-09-05 21:51 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் பெய்த பலத்த மழையின் காரணமாக ரோட்டில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

பலத்த மழை

பொள்ளாச்சியில் கடந்த சில மாதங்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு மழை பொழிவு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதற்கிடையில் பொள்ளாச்சியில் காலை முதல் கடுமையான வெப்ப சலனம் நிலவியது. பின்னர் மாலை 4 மணிக்கு திடீரென்று வானில் சூழ்ந்த கருமேகங்களால் திடீரென்று பலத்த மழை பெய்தது.

வாகன ஓட்டிகள் அவதி

சுமார் ஒரு மணி நேரம் இடைவிடாது கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பல்லடம் ரோடு சூடாமணி கூட்டுறவு சங்கத்திற்கு எதிரே மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து ஓடியது.

மேலும் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதிப்பட்டனர். பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்து கொண்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்