மும்பை- ஈரோடு இடையே சிறப்பு ரெயில்-சேலம் வழியாக இயக்கப்படுகிறது

மும்பை- ஈரோடு இடையே சிறப்பு ரெயில் சேலம் வழியாக இயக்கப்படுகிறது.;

Update:2023-08-31 01:53 IST

சூரமங்கலம்:

மும்பை- ஈரோடு இடையே சிறப்பு ரெயில் சேலம் மும்பை நான்டேட்டில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டுக்கும், மறு மார்க்கத்தில் ஈரோட்டில் இருந்து மும்பை நான்டேட்டிற்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது, இந்த ரெயில்களின் சேவை காலம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு செய்வதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மும்பை நான்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு ரெயில் (07189) நாளை முதல் வருகிற 29-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் நான்டேட்டில் இருந்து மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.48 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு ஈரோடு சென்றடையும்.

இதேபோல் மறுமார்க்கத்தில் ஈரோடு - மும்பை நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (07190) வருகிற 3-ந் முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ஈரோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு மும்பை நான்டேட் சென்றடையும்.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்