முனீஸ்வரசாமி கோவில் விழா

பர்கூர் அருகே முனீஸ்வரசாமி கோவில் விழா நடந்தது.

Update: 2022-08-11 16:23 GMT

பர்கூர்:-

பர்கூர் அருகே சாலிநாயனப்பள்ளி முனீஸ்வர சுவாமி கோவில் 34-ம் ஆண்டு திருவிழா நடந்தது. கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 2-ம் நாளில் சாமிக்கு அபிஷேகம், யாக பூஜை, ஆராதனை, பெண்கள் பால்குடம் ஊர்வலம் நடந்தது. சாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவன் பார்வதி திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தெருக்கூத்து, சாமி ஊர்வலம் ஆகியன நடந்தது. முனீஸ்வரர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சாலிநாயனப்பள்ளி பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்