நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மே தின ஊர்வலம்

ஜெயங்கொண்டத்தில் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் மே தின ஊர்வலம் நடத்தினர்.;

Update:2023-05-02 00:00 IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தற்காலிக துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தொழிலாளர் தினத்தையொட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்களின் மே தின ஊர்வலம் திருச்சி சாலையில் உள்ள பயணியர் மாளிகையில் இருந்து தாரை, தப்பட்டையுடன் அண்ணா சிலை, கடைவீதி மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் வந்தடைந்தனர். பின்னர் நகராட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் சிலம்புச்செல்வி கொடி ஏற்றி வைத்தார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்