பட்டா வழங்க வேண்டும்

பட்டா வழங்க வேண்டும்;

Update:2023-03-07 01:13 IST

தஞ்சை காந்திபுரம் பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட பலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை தாலுகா மேலவெளித்தோட்டம் கிராமத்தில் தனி தாசில்தார் (ஆதிதிராவிடர் நலம்) மூலம் கடந்த 1994-ம் ஆண்டு தமிழகஅரசு 150 ஆதிதிராவிடர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை ஒப்படைப்பு ஆணை வழங்கப்பட்டு, இந்த பகுதிக்கு காந்திபுரம் என பெயரிட்டு சுமார் 29 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு இதுநாள் வரை நிரந்தர பட்டா வழங்கப்படாமல் உள்ளதால் அரசின் சார்பில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்படும் எந்தவித நிதிஉதவியோ, அரசின் வீடு கட்டும் உதவியோ, வங்கிக்கடனோ மற்றும் இதர சலுகைகள் எதுவும் கிடைக்கப்பெறாமல் உள்ளோம். எனவே எங்கள் மனு மீது தனி கவனம் செலுத்தி பட்டா வழங்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்