யோகா குறித்த தேசிய பயிலரங்கம்

யோகா குறித்த தேசிய பயிலரங்கம்;

Update:2023-08-03 00:15 IST

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை மற்றும் பெங்களூரு யோகா அறிவியல் மையம் இணைந்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் யோகா குறித்த தேசிய பயிலரங்கத்தை நடத்தியது. பயிலரங்கத்திற்கு நூலகர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறையின் முன்னாள் பதிவாளர் இளங்கோவன் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் கல்வி புல மேலாளர் பேராசிரியர் சீனிவாசன் பேசினார். இதில் பல்வேறு கல்வி நிறுவனங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை தலைவர் மணியழகு வரவேற்றார். முடிவில் இணை பேராசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்