காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு இயற்கை உரம்: 367 மெட்ரிக் டன் உரமூட்டைகள் தயாரிப்பு

காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு 367 மெட்ரிக் டன் இயற்கை உரமூட்டைகள் தயார் செய்து கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

Update: 2022-06-19 04:37 GMT

சென்னை மாதவரம் சின்ன சேக்காடு பகுதியில் காற்றுப்புகும் வகையிலான மக்கும் குப்பை பதனிடும் நிலையம் உள்ளது. இங்கு தினசரி சேகரிக்கப்படும் 100 மெட்ரிக் டன் அளவிலான காய்கறி மற்றும் பழக்கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் கழிவுகள் எந்திரங்கள் மூலம் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திறந்த வெளியில் காயவைத்து பின்னர் சலித்து உரமாக மாற்றுகின்றனர். இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரம் 50 கிலோ மூட்டையாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு விவசாய பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 30 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் தமிழ்நாடு கூட்டுறவு இணையத்துக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 367.30 மெட்ரிக் டன் உரமூட்டைகள் கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்