களியக்காவிைள அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-20 23:19 IST

குழித்துறை, 

களியக்காவிளை அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டெம்போ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தீவிர சோதனை

நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவிற்கு கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக குமரி-கேரள எல்லையான களியக்காவிளை, கண்ணுமாமூடு, புலியூர்சாலை, ஊரம்பு, மேக்கோடு உள்ளிட்ட சோதனைச்சாவடிகள் வழியாக ரேஷன் அரிசி தொடர்ந்து கடத்தப்படுகிறது.

இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் அரவிந்த் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் ஆகியோரின் உத்தரவின்பேரில் சோதனைச்சாவடிகளில் அதிக அளவு போலீசார் குவிக்கப்பட்டு இரவு பகலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

4 டன் ரேஷன் அரிசி

இந்தநிலையில் நேற்று அதிகாலையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த டெம்போவில் சிறு சிறு மூடைகளில் 4 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இந்த அரிசியை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து டெம்போவுடன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். மேலும், டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் திக்குறிச்சியை அடுத்த ஒற்றிவிளையை சேர்ந்த ஜஸ்டின் ராஜ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை காப்புக்காடு குடோனிலும், டெம்போவை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்