தேனி அருகேஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

தேனி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-03-30 18:45 GMT

தேனி அருகே பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்த மதன்குமார் மனைவி ஐஸ்வர்யா (வயது 27). இவர், முத்துத்தேவன்பட்டியில் மருந்துக்கடை நடந்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். போடி விலக்கு பகுதியில் வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், ஐஸ்வர்யா கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறித்தார்.

அதில் 1½ பவுன் கொண்ட அந்த சங்கிலி அறுந்து, அரை பவுன் அளவுக்கு மட்டும் மர்ம நபரின் கையில் சிக்கியது. அவர் அதை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். ஐஸ்வர்யா ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்து லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்