தூத்துக்குடி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Update: 2023-09-11 18:45 GMT

தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரத்லிங்கம் தலைமையிலான போலீசார் தாப்பாத்தி அகதிகள் முகாம் செல்லும் வழியில் திடீர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அங்கு வந்த ஒரு மினிலாரியை மடக்கி சோதனை செய்தனர். அந்த லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 25 மூட்டைகளில் மொத்தம் 1250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

உடனடியாக மினி லாரியில் இருந்த தூத்துக்குடி கணேசபுரம் பாத்திமாநகரை சேர்ந்த பிரிட்டோ மகன் கரோலின் (வயது 31), கோவில்பட்டி காந்திநகர் ஜவகர்லால் தெருவை சேர்ந்த மாரியப்பசாமி மகன் மணிகண்டன் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தாப்பாத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை சாத்தூர் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தியது தெரியவந்தது.

இது குறித்து தூத்துக்குடி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்