வீட்டு மனைப்பட்டா வேண்டும்

வீட்டு மனைப்பட்டா வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமாரிடம் பொதுமக்கள் மனு அளி்த்தனர்.

Update: 2022-11-07 18:45 GMT

கண்டாச்சிமங்கலம், 

சின்னசேலம் அருகே நயினார்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் நயினார்பாளையம் இந்திரா நகர் பகுதியில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 130 குடும்பத்தினர் சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கவில்லை. இதனால் மின் இணைப்பு, சாலை வசதி ஆகியவை எங்களுக்கு வழங்கப்படவில்லை. தற்போது தமிழக முதல்-அமைச்சர் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளார். அதன்படி எங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எங்களுக்கு பட்டா வழங்குவதை தடுக்கும் வகையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே ஏழை, எளிய மக்களான எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதனை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்