பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2022-05-18 19:18 GMT

விழுப்புரம்,

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் மகாவிஷ்ணு முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் கலைச்செல்வி அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா கலந்துகொண்டு பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று அறிவுரை வழங்கினார். பின்னர் மாணவிகளுக்கு ஏற்படும் சிக்கலை தீர்த்துக்கொள்ள காவல்துறையின் அவசர தொலைபேசி எண்ணை வழங்கி கலந்துரையாடினார். இந்த கருத்தரங்கில் மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர். கருத்தரங்க நிகழ்ச்சியை வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் லதாகுமாரி தொகுத்து வழங்கினார். முடிவில் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் லட்சுமி நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சுசான்மரி நெப்போலியன், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் சுடர்கொடி, புள்ளியியல் துறை உதவி பேராசிரியர் சண்முகத்தாய் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்