முதியவருக்கு கத்திக்குத்து

முதியவருக்கு கத்திக்குத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-05-19 19:42 IST

பரமக்குடி, 

பரமக்குடி அருகே உள்ள மேலாய்குடி சண்முகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவன் (வயது70). இவருக்கும் அவரது உறவினரான பரமக்குடியை சேர்ந்த கோபிநாத் என்பவருக்கும் சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கோபிநாத் பரமக்குடியில் இருந்து மேலாய்குடி சண்முகநாதபுரத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இருந்த கேசவனிடம் தகராறு செய்து மறைத்து வைத்திருந்த கத்தியால் கேசவனை வயிற்றில் குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கேசவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் எமனேசுவரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்