2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2023-10-24 18:45 GMT


நாகை துறைமுகத்தில், 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

புயல் எச்சரிக்கை

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்த புயலானது வங்கதேசத்தில் கெபுரா-சிட்டகாங் இடையே இன்று (புதன்கிழமை) கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாகை துறைமுக அலுவலகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடல் வழக்கத்தை விட சீற்றமாகவே காணப்படுகிறது. இதனால் நாகை மீனவர்கள் 2-வது நாளாக நேற்று மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இதனால் தங்களது விசைப்படகு மற்றும் பைபர் படகுகளை கடுவையாற்றங்கரையில் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்