செவிலியர் மானபங்கம்; 2 பேருக்கு வலைவீச்சு

கடலூர் முதுநகர் அருகே செவிலியரை மானபங்கம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2023-05-22 00:15 IST

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பெண், கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வருகிறாா். சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து வீட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் அவரை அதே பகுதியை சேர்ந்த அப்பாவு மகன் சுதாகர் (வயது 19), பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ரவி மகன் கோகுல் (19) ஆகியோர் கையை பிடித்து இழுத்து, மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில் சுதாகர், கோகுல் ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்