அ.தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள்
அ.தி.மு.க.வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள்;
பரமக்குடி
ஓ.பன்னீர்செல்வம் அணியில் முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய செயலாளராக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் அங்கிருந்து விலகி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் இணைந்தார். ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகாமுனியசாமி ஆகியோர் முன்னிலையில் இணைந்தார். அவருடன் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆப்பனூர் முத்துராமலிங்கம், மாணவர் அணி ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், முதுகுளத்தூர் கிழக்கு ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயகாந்தி, கிளைச் செயலாளர் கோவிந்தன் ஆகியோரும் கட்சியில் இணைந்தனர். அவர்களை மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஏ. முனியசாமி பொன்னாடை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார்.