மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை

தினத்தந்தி செய்தி எதிரொலியால் மூதாட்டிக்கு முதியோர் உதவித்ெதாகை மீண்டும் கிடைக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்து உள்ளார்.

Update: 2022-06-21 17:12 GMT


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருடைய மனைவி சிவகாளி (வயது 75). இவரது கணவரும் ஒரே மகனும் இறந்துவிட்ட நிலையில் ஆதரவின்றி அரசின் முதியோர் உதவித்தொகையை பெற்று வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சிவகாளிக்கு கடந்த 2 மாதங்களாக முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டது. இதுகுறித்து விசாரித்தபோது அவரது பெயர் தவறுதலாக வசதியானவரின் ஸ்மார்ட் கார்டில் சேர்ந்துள்ளதால் உதவித்தொகையை நிறுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் பிரசுரமானது. இதனை அறிந்த கலெக்டர் ஜான்டாம்வர்கீஸ் உடனடியாக அந்த மூதாட்டிக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு உத்தரவிட்டார். இதன்படி அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து மூதாட்டிக்கு உதவித்தொகை கிடைக்க உத்தரவு தயார் செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மூதாட்டி சிவகாளிக்கு முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவினை கலெக்டர் வழங்கினார். கலெக்டரின் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து பாராட்டி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்