மோட்டார் சைக்கிள் மீதுடிராக்டர் மோதி தொழிலாளி பலி

சின்னமனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதியதில் தொழிலாளி பலியானார்.;

Update:2023-10-15 00:15 IST

சின்னமனூர் அருகே உள்ள புத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று இவர், ஓடைப்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சுக்காங்கல்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். சின்னமனூர்-ஓடைப்பட்டி சாலையில் மோட்டார் சைக்கிள் சென்றது. ஓடைப்பட்டியில் சென்றபோது எதிரே சீப்பாலக்கோட்டையை சேர்ந்த வசந்த (25) என்பவர் ஓட்டி வந்த டிராக்டர், இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஓடைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ராஜபாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்