இந்து மக்கள் கட்சி சார்பில்விநாயகர் சிலை ஊர்வலம்

இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது.;

Update:2023-09-21 00:15 IST

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜை, தீபாராதனைகள் நடந்து வந்தது. நேற்று மாலையில் ஓட்டப்பிடாரம் உலகாண்டேஸ்வரி அம்மன் கோவில் திடலில் இருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடந்தது. ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் ராமகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜேந்திரன், ஒட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர்மாரிமுத்து, ஒன்றிய மகளிர் அணித் தலைவி கலா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் குருக்குசாலை வழியாக தினேஷ்புரம் சென்றடைந்தது. அங்கு சிலை கடலில் கரைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்