நெல்லை-தென்காசி வழித்தடத்தில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்க அனுமதி

நெல்லை-தென்காசி வழித்தடத்தில் 110 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-03-18 18:45 GMT

நெல்லையில் இருந்து சேரன்மாதேவி, அம்பை, கீழக்கடையம், பாவூர்சத்திரம் வழியாக தென்காசி வரை 72 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த வழித்தடத்தில் நெல்லை-செங்கோட்டை பாசஞ்சர், நெல்லை-பாலக்காடு, நெல்லை-மேட்டுப்பாளையம், நெல்லை-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு, வேகமாக ரெயில்களை இயக்குவதற்கு வசதியாக தண்டவாளம் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த வாரம் இந்த பாதையில் அதிவேக ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்பட்டது. மேலும் மின்சார ரெயிலும் இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை-தென்காசி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரெயில்களை இயக்குவதற்கு ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. வளைவு பகுதிகளில் மட்டும் வேகத்தை குறைத்து இயக்குமாறு கூறியுள்ள நிர்வாகம், அந்த இடங்களையும் குறிப்பிட்டு உள்ளது. இதையடுத்து இந்த பாதையில் ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு ரெயில் நிலையத்துக்கும் ரெயில்கள் வந்து செல்லும் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்