வட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுபக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

வட பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.;

Update:2023-02-21 03:42 IST

இளம்பிள்ளை,

இடங்கணசாலை நகராட்சி மெய்யனூரில் அமைந்துள்ள வட பத்திரகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை (புதன்கிழமை) காலை 9.45 மணியில் இருந்து 10.45 மணிக்குள் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை கஞ்சமலை சித்தேஸ்வரர் கோவிலில் இருந்து குதிரை, பசு மற்றும் மேளதாளத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித தீர்த்த குடங்களையும் முளைப்பாரியையும் ஊர்வலமாக வட பத்திரகாளியம்மன் கோவிலுக்கு எடுத்து வந்தனர். கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்