தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update:2022-07-20 20:36 IST

பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரத்தில் ஆத்மநாதவனம் உள்ளது. இங்கு சமுக்தியாம்பிகை, காலசம்ஹார பைரவர், சரபேஸ்வரர் தனி, தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர். தேய்பிறை அஷ்டமியையொட்டி காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு ஆராதனை, பூஜைகள் நடைபெற்றது. இதில் காலசம்ஹார பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று சமுக்தியாம்பிகை அம்மனுக்கு திப்பிளி, மிளகு, பச்சை கற்பூரம், பூலாங்கிழக்கு உள்ளிட்ட 16 வகையான மூலிகை மருந்து பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு மூலிகை பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்