ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது

ஒரத்தநாடு பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-08-21 01:07 IST

ஒரத்தநாடு:

ஒரத்தநாடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தநாடு புதூர் பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த ஒரு நபரை போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் (வயது50) என்பது தெரிய வந்தது.இதையடுத்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்