உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2022-08-18 21:55 IST


கோவை அரசு ஆஸ்பத்திரியில் 'அறம் செய்ய விரும்பு' என்ற தலைப்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதற்கு கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா முன்னிலை வகித்தார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பங்கேற்று உடல் உறுப்பு தானம் குறித்தும், அதன் முக்கியத்துவம், உடல் உறுப்பு தானத்தினால் ஏராளமானோர் மறுவாழ்வு பெறுகின்றனர் என்பது குறித்தும் விளக்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்