4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் சாவு

மதுரையில் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெயிண்டர் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-10-14 01:17 IST

மதுரை மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 45). பெயிண்டரான இவர் கட்டிடங்களில் ஒப்பந்தம் முறையில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மதுரையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது 4-வது மாடியில் அவர் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கால்தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயத்துடன் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்