பெயிண்டர் கத்தியால் குத்திக்கொலை

வடவள்ளியில் பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை சுடுகாட்டில் வீசிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-03-22 00:15 IST

வடவள்ளி

வடவள்ளியில் பெயிண்டரை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை சுடுகாட்டில் வீசிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்த போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெயிண்டர்

கோவை வடவள்ளியை அடுத்த வேடப்பட்டியை சேர்ந்தவர் கோபால். இவருடைய மகன் ஜெகன்ராஜ் (வயது30). பெயிண்டர்.

நம்பியழகம்பாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மதன்ராஜ் (வயது32). இவர் மோட்டார் சைக்கிளை அடமானம் பெற்று வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஜெகன்ராஜ், மதன்ரா ஜிடம் செல்போன் வாங்கி தருமாறு கூறி பணம் கொடுத்து உள்ளார். அவரிடம் பணத்தை வாங்கிய மதன்ராஜ் செல்போன் வாங்கி தராமல் காலம் தாழ்த்தி வந்தார்.

வாக்குவாதம்

இதனால் நேற்று முன்தினம்இரவு 10 மணியளவில் ஜெகன்ராஜ், மதன்ராஜின் வீட்டிற்கு சென்றார். அங்கு மதன்ராஜ் இல்லை. இது பற்றி மதன்ராஜின் மனைவியிடம் கேட்ட போது அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது அங்கு வந்த மதன்ராஜ் தனது மனைவிடம் ஏன் தகராறு செய்கிறார் என்று கேட்டு ஜெகன்ராஜை கண்டித்து உள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மதன்ராஜ் கட்டையால் ஜெகன்ரா ைஜ தாக்கி கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய ஜெகன்ராஜை, மதன்ராஜ் அந்த வழியாக வந்த ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்று வீர கேரளம் டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானம் அருகே வீசினார்.

பின்னர் அவர், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்து வரவ ழைத்து உள்ளார். அவர்கள் வந்து பரிசோதித்த போது ஜெகன் ராஜ் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனால் அங்கிருந்து தப்பி ஓடிய மதன்ராஜ், ஜெகன்ராஜின் சகோதரியை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜெகன்ராஜை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார்.

கைது

இது குறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் விரைந்து சென்று ஜெகன்ராஜின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன்ராஜை கைது செய்தனர்.

விசாரணையில் மதன்ராஜ் ஏற்கனவே ஒரு முறை ஜெகன்ராஜை இடுப்பில் கத்தியால் குத்தி உள்ளார். மேலும் மதன்ராஜ் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஜெகன்ராஜ் கொலை யில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? கத்திக்குத்துப்பட்ட ஜெகன்ராஜ் யாருடைய ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்டார் என்பது உள்பட பல்வேறு கோணங்களில் வடவள்ளி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்