பனை விதைநடும் விழா

பனை விதைநடும் விழா நடைபெற்றது.;

Update:2023-09-25 23:14 IST

பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு பனை விதை நடும் விழா நடைபெற்றது. இதனையொட்டி சிவந்திபாளையம் வாய்க்கால் கரையோரம் பனை விதைகள் நடப்பட்டன. இதில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணியர்கள் மற்றும் என்.புதூர் அரசு உயர்நிலைப்பள்ளி சாரணியர்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டு வைத்தனர். இதில் சாரண, சாரணியர் இயக்க மாவட்ட செயலாளர் சாந்தி, பயிற்சியாணையர் முத்துசாமி மற்றும் சாரணிய ஆசிரியர் பூமதி, குருளையர், ஆசிரியர் பானுமதி மற்றும் மண்மங்கலம் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்