பங்குனி பொங்கல் விழா

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியிலுள்ள ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்களம் கண்ணமங்கலத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.;

Update:2023-04-08 00:15 IST

சிங்கம்புணரி

சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியிலுள்ள ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்களம் கண்ணமங்கலத்தில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் மிக சிறப்பாக நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜை மற்றும் சுவாமி வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று 9-ம் நாள் விழாவில் காலை ஊரின் மையப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் வைத்து பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து ஊரின் முக்கிய வீதி வழியாக பால்குடம் எடுத்து வந்து கோவிலில் அம்பாள் சன்னதிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் பால் ஊற்றப்பட்டு அம்பாளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், அபிஷேகம் நடைபெற்று பாலபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் கோவில் முன்பு சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்குனி பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இரவு தேவர் திருமகனார் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து இன்று காப்பு இறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஐந்து நிலை நாடு மூன்றாவது மங்களம் கண்ணமங்கலம் கிராம மக்கள் மற்றும் கோவில் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்