பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தில்தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

பரமன்குறிச்சி முந்திரி தோட்டத்தில் தசரா பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update:2023-10-25 00:15 IST

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் ஊர்மக்கள் சார்பாக குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பக்தர்களுக்குஅன்னதானமும் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாநடந்தது. கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட தி.மு.க., சிறுபான்மை பிரிவு செயலாளர் ராஜேஷ், வெள்ளாளன்விளை ஊராட்சி தலைவர் ராஜரெத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு நல் நூலகர் மாதவன் வரவேற்றார். உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் தி.மு.க. செயலாளருமாந சந்தையடியூர் மால்ராஜேஷ் நிகழ்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பரமன்குறிச்சி வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த சுரேஷ், பொன்ராஜ், கோபி, நெடுஞ்சாலைத்துறை வீரமணி, திருச்செந்தூர் அமிர்தலிங்கம் மற்றும் கணேசன், பாவுஜி, சுந்தர மூர்த்தி உட்பட ஊர் மக்கள் கலந்து கொண்டனர்

ஏற்பாடுளை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க., பிரதிநிதி மதன்ராஜ் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்