மதுபோதைக்கு அடிமையான மகனை அடித்தே கொன்ற பெற்றோர் - மதுரையில் அதிர்ச்சி சம்பவம்

மதுரையில் மதுபோதைக்கு அடிமையான மகனை பெற்றோர் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2023-03-08 09:05 IST

மதுரை,

மதுரை அருகே மது போதைக்கு அடிமையான மகனே அடித்துக் கொலை செய்துவிட்டு தகனம் செய்த குடும்பத்தினரை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடி அருகே தவிடன்-காளியம்மாள் தம்பதியின் இளைய மகன் சரவணன் என்பவர் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. மது குடித்துவிட்டு வீட்டில் உள்ளவர்களிடம் சரவணன் அடிக்கடி தகராறு செய்து வந்தவுடன் மது குடிப்பதற்காக வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று விற்றும் வந்துள்ளார்.

பின்னர் மீண்டும் தகராறு ஏற்படவே தவிடன்-காளியம்மாள் தம்பதி மற்றும் அவர்களது மூத்த மகன் சங்கரன் ஆகியோரை சரவணன் தாக்கி இருக்கிறார். மூன்று பேரும் சேர்ந்து சரவணனை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கொலையை மறைத்து சரவணனின் உடலை மயானத்தில் எரித்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் சரவணன் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதைத்தொடர்ந்து மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Full View

Tags:    

மேலும் செய்திகள்