நாடாளுமன்ற தேர்தல்: தென் மாவட்டங்களுக்குப் படையெடுக்கும் மக்கள் - ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.

Update: 2024-04-18 19:54 GMT

சென்னை,

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந்தேதி தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்யும் விதமாக வரும் 19-ந்தேதி தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.

இதன் காரணமாக கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்