பகுதி நேர ரேஷன் கடை

ரெட்டியார்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை மாவட்ட வருவாய் அதிகாரி திறந்து வைத்தார்.

Update: 2023-09-04 18:45 GMT

வாணாபுரம்

வாணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் 155 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இப்பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள வாணாபுரம் ரேஷன்கடைக்கு சென்று வர மிகவும் சிரமமாக இருப்பதாகவும், எனவே ரெட்டியார் பாளையத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து ரெட்டியார்பாளையத்தில் பகுதி நேர ரேஷன்கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், பாரதிதாசன், துரைமுருகன், ஒன்றியக்குழு துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, தாசில்தார் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கலந்துகொண்டு ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், சவுரிராஜன், ஊராட்சி மன்ற தலைவர் தீபாஅய்யனார், துணைத்தலைவர் வசந்திராஜா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்