தொடர் விடுமுறை எதிரொலி: சென்னை திரும்ப ரெயில் நிலையத்தில் குவியும் பயணிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்புவதற்காக ரெயில் நிலையங்களில் பயணிகள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

Update: 2022-10-05 13:23 GMT

மதுரை:

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஆயுத பூஜை, இன்று விஜயதசமி பண்டிகை என அடுத்தடுத்து அரசு விடுமுறை நாட்கள் ஆகும்.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி இருந்தவர்களை தங்களது சொந்த ஊருக்கு செல்ல வசதியாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 30-ந்தேதி மற்றும் 1-ந் தேதி ஆகிய 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதன்மூலம் சென்னையில் இருந்து சுமார் 6 லட்சம் பேர் வரை சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று உள்ளனர். இந்த நிலையில் நாளை வேலை நாள் என்பதால் விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்புவதற்காக ரெயில்நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக அளவில் கூடியுள்ளனர்.

பேருந்துகளில் டிக்கெட் விலை அதிகமாக காணப்படுவதால் பெரும்பாலான பயணிகள் ரெயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகள் முந்தி அடித்து கொண்டு ஏறி இடம் பிடித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்