போதை பொருட்களை ஒழிக்க கோரி நாமக்கல்லில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

போதை பொருட்களை ஒழிக்க கோரி நாமக்கல்லில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்;

Update:2022-07-30 18:24 IST

தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க கோரி நேற்று பா.ம.க. சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.கே.செந்தில் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தின்போது போதை பொருட்கள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க கோரியும், இளம் தலைமுறையினரை போதை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர்கள் ராமநாதன், செந்தில், சீனிவாசன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ரமேஷ், மோகன்ராஜ், மாவட்ட அமைப்பு செயலாளர் பொன்னுசாமி, இளைஞர் சங்க பொறுப்பாளர்கள் பாலு, உமா சங்கர், மாவட்ட கவுன்சிலர் வடிவேல், ஒன்றியக்குழு துணை தலைவர்கள் பெரியசாமி, பிரதாப் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்