பழனி அருகே சாலையோரத்தில் இறந்து கிடந்த மயில்

பழனி அருகே சாலையோரத்தில் மயில் இறந்து கிடந்தது.;

Update:2022-12-19 22:54 IST

பழனி அன்னகாமாட்சி அம்மன் கோவில் அருகே பழைய தாராபுரம் சாலையோரத்தில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அதில், இறந்து கிடந்தது சுமார் 2 வயதுடைய பெண் மயில் என்பது தெரியவந்தது.

பின்னர் மயிலின் உடலை கைப்பற்றி பழனி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதையடுத்து மயிலின் உடல் பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து வனத்துறையினர் மயிலை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று புதைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, பரிசோதனை அறிக்கை வந்தபின்புதான் மயில் எப்படி இறந்தது என்பது தெரியவரும். அதன்பிறகு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்