பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம்

பூதிப்புரம், பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-10-06 18:45 GMT

தேனி அருகே பூதிப்புரம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவக்குமார் தலைமையிலான அலுவலர்கள் அந்த பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு செய்தனர். 30 கடைகளில் இந்த ஆய்வு நடந்தது. அதில் 2 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு கண்டறியப்பட்டது. அந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் ஆளவந்தார் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக ஆய்வு செய்தனர். அப்போது ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கடை உரிமையாளருக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது இளநிலை உதவியாளர் பாத்திமா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் இருந்தனர். மேலும் கடை உரிமையாளர்களுக்கு செயல் அலுவலர் ஆளவந்தார் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்